சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் அதற்கருகில் பாரியதொரு பொருளாதார வலயத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த டிசம்பர் மாதம் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்ட போது, பல நூற்றுக்கணக்கான மக்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
Read more......இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அமைதி காத்தே வந்திருந்தார். இவர் சிறிலங்காவிற்கு வருகை தந்த பின்னர் , ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தனது அணுகுமுறையையும் மீள ஆராய்வதற்கான தக்க தருணமாக அமைந்திருக்கும்.
Read more......இலங்கையின் அரசியல் என்பது இன்றைய நிலையில் இலங்கையின் அரசியல் அல்ல மாறாக, அது ஒரு சர்வதேச அரசியல் விவகாரமாக விரிவுபெற்றுவிட்டது. இனி எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கைத் தீவின் அரசியiலை புவிசார் அரசியல் முரண்பாடுகள்தான் தீர்மானிக்கப் போகின்றன. இலங்கையை மையப்படுத்தி இடம்பெறவுள்ள புவிசார் அரசியல் முரண்பாட்டின் மையமாக சீனாவே இருக்கப் போகிறது. இன்றைய உலக ஒழுங்கில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சீனாவும் ஒரு நிலையமாக (ஊநவெநச) மாறிவிட்டது. இந்த நிலையில்தான் சீனா இலங்கையில் வலுவாக காலூன்றிவருகிறது.
Read more......சீனாவிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சிறிய நாடுகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் அதேவேளையில், சீனா தனது சொந்த பூகோள கேந்திர நலன்களை மேலும் மேம்படுத்துவதற்காகவே தனது பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்தி வருகிறது. சீனா தனது ஒரு றில்லியன் டொலர் பெறுமதியான ‘ஒரு அணை ஒரு பாதை’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக கேந்திர முக்கியத்துவ அமைவிடங்களில் அமைந்துள்ள நாடுகளின் பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு தன்னாலான ஆதரவுகளை வழங்கி வருகிறது. இதற்காக சீனாவால் இந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு பெருந்தொகையான நிதி கடனாக வழங்கப்படுகிறது.
Read more......சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அவர் கொழும்பில் இருந்த வேளையில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். மேற்படி நேர்காணலை சண்டே டைம்ஸ் – ஆமிரேஜ் இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. Read more......