இலங்கையில் தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடுதிரும்பும் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் மூலோபாய ஆய்வுகளுக்கான திருகோணமலை நிலையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல். இலங்கையின் தேசியப்பிரச்சினை, சர்வதேச பயங்கரவாதம், கொழும்பு துறைமுக நகரம், இலங்கை-சீன உறவுகள் மற்றும் கடன்சுமை என்று பல பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.
Read more......
ஸ்ரீராதா டத்தா, புதுடில்லியை தளமாகக் கொண்டிருக்கும் முன்னணி சிந்தனைக் கூடமான, விவேகானந்தா சர்வதேச நிதியத்தின், அயலக கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவராவார். விவேகானந்தா சர்வதேச நிதியம், ஆளும் பி.ஜே.பி அரசாங்கத்தின் கொள்கை சார் விடயங்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல முக்கிய சிந்தனைக் கூடமாகும்.
Read more......
கொமடோர் வாசன்: இந்திய கடற்படையின் ஒய்வுபெற்ற மூத்த அதிகாரியாவார். தற்போது, சீன ஆய்வுகளுக்கான சென்னை நிலையத்தின் பணிப்பாளராகவும், இந்திய தேசிய கடற்பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தின், தமிழ் நாட்டு கிளையின் பணிப்பாளராகவும் செயற்பட்டுவருகின்றார்.
Read more......
கடந்த இருபது ஆண்டு காலங்களில் சீனாவின் வளர்ச்சியானது அமெரிக்காவின் பூகோள முதன்மை நிலையை கேள்விக்குறி யாக்கிவிட்டது. அமெரிக்க ஒற்றைமைய உலகம் இன்று பல மைய நிலையை நோக்கி நகரும் இவ்வேளையில் பல்வேறு பிராந்திய நாடுகளும் தமக்கு சாதகமான ஒரு மையத்தை நோக்கி நகரும் தன்மையை வெளியுறவுக் கொள்கையாக தேர்தெடுத்துக் கொண்டுள்ளன. சீன அமெரிக்க உறவு ஒரு நீண்ட கால போட்டியை நோக்கி சென்றுள்ளது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணை முயற்சிகளில் ஈடுபட்ட சர்வதேச சமூகத்தினால் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகமாக இன்னமும் விளங்கும் சொல்ஹெய்ம், எமது தளத்திற்கு வழ
Read more......