சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த இராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அவர் கொழும்பில் இருந்த வேளையில் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். மேற்படி நேர்காணலை சண்டே டைம்ஸ் – ஆமிரேஜ் இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. Read more......